செய்திகள் வணிகம்
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
கோலாலம்பூர்:
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
மைஇவெண்ட்ஸ் வர்த்தக மேம்பாட்டு பிரிவு இயக்குநர் டைலான் முஹம்மத் இதனை கூறினார்.
மைஇவெண்ட்ஸ், அப்சலூட் இவெண்ட்ஸ் ஆகியவை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பெருநாளை முன்னிட்டு இந்த மாபெரும் விற்பனை சந்தையை ஏற்பாடு செய்து வருகின்றன.
பொதுமக்கள் கவர்ச்சிகரமான பெருநாள் பொருள்களையும் உபகரணங்களையும் வாங்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில், கோலாலம்பூரில் வழக்கமாக இது நடைபெறும்.
தற்போது காயா ராயா விழா அடுத்த ஆண்டு லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
மேலும் புரூணை, பினாங்கிற்கும் அது விரிவுபடுத்தப்படுகிறது.
அதிக தேவை காரணமாக வெளிநாடுகளுக்கு விழாவை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
புரூணை காயா ராயா விழா வரும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை பிரைடெக்ஸ் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து பினாங்கு விழா வரும் 2026 மார்ச் 6 முதல் 8 வரை பினாங்கு அனைத்துலகமாநாட்டு மையத்தில் நடைபெறும்.
பின்னர் வரும் 2026 மார்ச் 13 முதல் 16 வரை கோலாலம்பூரின் மைடேக்கில் இவ்விழா நடைபெறும்.
இதன் உச்சக்கட்டமாக காயா ராயா விழா லண்டனில் உள்ள ஒயிட் சிட்டி கண்காட்சி மையத்தில் வரும் 2026ஆம் ஆண்டு மே 2 முதல் 3 வரை நடைபெறும்.
பண்டிகை கால பார்வையாளர்களை மையமாகக் கொண்ட காயா ராயா விழா போலல்லாமல்,
இந்த முயற்சி அனைத்துலக ஒத்துழைப்புகள், அனைத்துலக சந்தைகளில் நுழைவதற்கான நுழைவாயிலாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 21, 2026, 9:56 am
இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவால் ரூ.10 லட்சம் கோடி இழப்பு: முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி
January 5, 2026, 11:20 am
வெனிசுவேலாவில் அரசியல் மாற்றம்: உலக எண்ணெய் விலை சரிவு
January 2, 2026, 3:46 pm
சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும் 4,600 புதிய BTO வீடுகள்
December 31, 2025, 12:43 pm
இன்று தலைநகரில் தங்கம் விலை குறைந்தது
December 25, 2025, 11:20 am
சாந்தா ஆன் தெ கோ பிரச்சாரத்துடன் ஜிவி ரைட் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியாக கொண்டுகிறது
December 22, 2025, 5:01 pm
ஜிவி ரைட் நிறுவனத்தின் 5 ரிங்கிட் சலுகை; இன்று முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் அமல்: கபீர் சிங்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 9, 2025, 9:26 am
