நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்

புது டெல்லி:

இந்தியாவில் முதல் டெஸ்லா ஷோரூமில் முதல் டெஸ்லா ஒய் மாடல் காரை மகாராஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் வாங்கினார்.

அமெரிக்காவின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் முதல் ஷோரூமை மும்பையில் கடந்த ஜூலை மாதத்தில் திறந்தது.

அப்போது டெஸ்லா ஒய் மாடல் காரை அமைச்சர் பிரதாப்,  பேரனுக்கு கொடுப்பதற்காக முன்பதிவு செய்திருந்தார்.

இந்தக் காரை முதல் இந்திய டெஸ்லா காராக அவர் பெற்று கொண்டார். இதுகுறித்து அமைச்சர் பிரதாப் கூறுகையில், நாட்டு மக்களிடையே மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காகவே டெஸ்லா காரை வாங்கியுள்ளேன் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset