நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா கைரினா மரண விசாரணை: நீதிமன்றத்திற்கு பொம்மையுடன் வந்த பிரதிவாதி வழக்கறிஞர்கள்

கோத்தா கினபாலு:

ஷாரா கைரினா மரண விசாரணை முன்னிட்டு பொம்மையுடன் பிரதிவாதி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களின் வழக்கறிஞர் டத்தோ ராம் சிங், அவரது வழக்கறிஞர்கள் குழுவினருடன் சேர்ந்து, இன்று இங்குள்ள மரண விசாரணை நீதிமன்றத்திற்கு ஒரு பொம்மையை கொண்டு வந்தார்.

இது இன்று காலை முதல் அங்கு இருந்த ஊடக பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்தது.

மறைந்த ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையின் இரண்டாவது நாளாக இன்று தொடர்கிறது.

இந்த நடவடிக்கைகளின் போது, ​​அவரது உடலில் உள்ள நிலை,  காயங்களைக் காண்பிப்பதில் குயின் எலிசபெத் மருத்துவமனை நோயியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியுவுக்கு உதவுவதற்காக இந்த சிலை கொண்டு வரப்பட்டது.

மேலும் இன்று டாக்டர் ஜெஸ்ஸி, அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் செயல்பாட்டு அதிகாரியின் கேள்விகளுக்கும், இறந்தவரின் பெற்றோர் உட்பட ஆர்வமுள்ள தரப்பினரின் கேள்விகளுக்கும் அந்தந்த வழக்கறிஞர்கள் மூலம் பதிலளிப்பதன் மூலம் தனது அறிக்கையைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset