செய்திகள் மலேசியா
நிதி அறிக்கையில் போலி தகவல்கள்: முன்னாள் நிறுவனத் தலைவருக்கு கைது உத்தரவு
கோலாலம்பூர்:
மலேசிய பங்கு சந்தை ஆணையம், சரவாக் ஒருங்கிணைந்த பெர்ஹாட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், நிர்வாகத் தலைமை அல்லாத இயக்குநரான முஹம்மத் அப்துல் கரீம் அப்துல்லாஹ் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அவர் தற்போது தப்பியோடி இருப்பதாகவும், மூலதன சந்தை, சேவைகள் சட்டம் பிரிவு 369(b)இன் குற்றச்சாட்டுக்கு எதிராக தேடப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
புர்சா மலேசியா பத்திரச் சந்தைக்கு பொய்யான அறிக்கைகளை சமர்ப்பித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் அவரை எதிர்த்து குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் கடைசியாக அறியப்பட்ட முகவரிகள் சிலாங்கூரின் ஷா ஆலாம் பகுதியில் உள்ள வீடும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள முகவரியும் என ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
அவரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பங்கு சந்தை ஆணையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2021-ஆம் ஆண்டு மற்றொரு நிறுவனத்தின் நிதி அறிக்கையில் தவறான தகவல் வழங்கியதாக இதே போன்ற குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
பின்னர், அரசு தரப்பின் ஒப்புதலுடன் 30 இலட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டு அந்த வழக்கு சமரசமாக முடிக்கப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 12:43 pm
மீன் விலை உயர்த்தப்படக்கூடாது: மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம்
March 13, 2026, 12:41 pm
போர் பதற்றத்திற்கு மத்தியில் கடல் பணியில் 18 மலேசியர்கள்
March 13, 2026, 11:12 am
பள்ளிகளில் ஐஎஸ் தாக்கத்தைத் தடுக்க கல்வி அமைச்சகம் கடும் கண்காணிப்பு
March 13, 2026, 10:23 am
லிபிஸ் மாவட்டத்தில் தொடர்ச்சியான சாலை விபத்துகள்: முதியவர் உட்பட இருவர் உயிரிழப்பு
March 13, 2026, 10:22 am
புனித மக்காவில் உம்ரா யாத்திரிகர்கள் தங்கும் பிரபல விடுதியில் தீ விபத்து
March 13, 2026, 10:04 am
ஹிஷாமுடின் அம்னோவுக்குத் திரும்பத் தயாராக உள்ளார்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
