நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீன் விலை உயர்த்தப்படக்கூடாது: மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம்

பூச்சோங்: 

ஈரான் - இஸ்ரேல் மோதலால் உலகளாவிய எண்ணெய் சந்தை பாதிக்கப்பட்டாலும் மீன் இறக்கும் மையங்களில் மீன் விலை அதிகரிக்கப்படக்கூடாது.

மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருள் இப்போதும் நிலைத்திருப்பதுடன், அரசாங்கம் எந்த புதிய கொள்கை மாற்றத்தையும் அறிவிக்கவில்லை என்று மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (LKIM) தலைவர் முஹம்மத் ஃபாயிஸ் ஃபட்சில் தெரிவித்தார்.

"மார்ச் முதல் மே மாதம் வரை மீன் பிடிப்பிற்கு வானிலை சாதகமாக இருக்கும் என முன்னறிவிப்பு உள்ளது. இப்போது எரிபொருளின் மானிய விலையும் நிலைத்துள்ளது. மீனவர்களும் வழங்கப்பட்ட கோட்டாவைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே விற்பனையாளர்கள் விலை உயர்த்த அவசியமில்லை," என்று அவர் தெரிவித்தார்.

இன்று LKIM நடத்தும் அக்ரோ மடானி விற்பனை (JAM) நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார். எதிர்வரும் ஹரி ராயாவை முன்னிட்டு இங்கு பலவித மீன்கள , கடல் உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 

மலேசிய வேளாண்மை, உணவுக் காப்புறுதி அமைச்சகம் (KPKM) மூலம் LKIM நடத்தும் இந்த திட்டம், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மீன், கோழி, இறைச்சி, உலர் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களைச் சந்தை விலையில் 10% முதல் 30% குறைவாக இங்கு கிடைக்கப்படுகிறது.

 விலை உயர்வுக்கான காரணமாக போக்குவரத்து செலவு அல்லது விநியோக சங்கிலி செலவு போன்ற விஷயங்களைத் தவிர்த்து பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.

"இந்தக் காரணிகளைச் சேர்த்து தொழில்துறையிலுள்ள மீன் விலை நிலைத்திருப்பதை உறுதி செய்ய அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும், " என்று அவர் கூறினார்.

JAM நிகழ்வில் மீன்கள் சுமார் ஒரு மணிநேரத்தில் விற்பனையாகி முடிந்தது. இது பொதுமக்கள் குறைந்த விலையில் மீன் வாங்க ஆர்வம் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

மேலும் LKIM, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை வழங்க RM20 மதிப்புள்ள கூப்பன் வழங்கியுள்ளது.

 "நகர்ப்புற B40 மக்கள் கூட அரசு உதவியை நாடுகிறார்கள். கடலில்லாத பகுதிகளிலும் மக்கள் குறைந்த விலையிலான மீன் வாங்க மீன்வள சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது," என்றார் அவர்.

மேலும், LKIM நடத்திய உள்நாட்டு இறால் வாங்கும் பிரச்சாரம் மூலம் மக்கள் இறால் இறக்குமதி செய்யாமல் உள்ளூர் இறால் வாங்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

JAM நிகழ்வில் 1.5 டன் கடல் உணவு வகைகளான இறால், சியாக், கேராப்பு, பாவால் எமஸ் (bawal emas), சென்சாரு, சிவப்பு மீன் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

மேலும், தேசிய மீனவர் சங்கம் (NEKMAT) உடன் இணைந்து, பெந்தாங், பஹாங் பகுதியில் ஹைபிரிட் மீன் பண்ணையில் வளர்க்கப்பட்ட பாத்தின் மீனும் RM10 விலைக்கு விற்கப்பட்டன.

மேலும் கூப்பன்கள், தள்ளுபடி வாயிலாக பொதுமக்கள் கூடுதல் சலுகையைப்  பெற்றனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset