செய்திகள் மலேசியா
லிபிஸ் மாவட்டத்தில் தொடர்ச்சியான சாலை விபத்துகள்: முதியவர் உட்பட இருவர் உயிரிழப்பு
லிபிஸ்:
லிபிஸ் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டு தனித்தனியான சாலை விபத்துகளில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர்.
முதல் விபத்து மதியம் சுமார் 1.30 மணியளவில், கம்போங் மெராபோ அருகிலுள்ள லிபிஸ்–மெராபோ சாலையின் 95-ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. 66 வயதான சபெயின் அப்துல் ரஹ்மான் ஓட்டிச் சென்ற சிறிய கார், எதிரே வந்த விரைவு பேருந்துடன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாவட்ட காவல் தலைவர் இஸ்மாயில் மான் தெரிவித்ததாவது, 15 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த பேருந்து கிளாந்தானில் உள்ள கோத்தா பாருவிலிருந்து சிலாங்கூரின், கிள்ளானை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
பாதிக்கப்பட்டவர் ஓட்டிய கார் திடீரென சந்திப்பிலிருந்து சாலையில் நுழைந்ததால் பேருந்து மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது. காரில் இருந்த அவரது மகன் காயமடைந்து லிபிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இரண்டாவது விபத்து பிற்பகல் 2.28 மணியளவில், கம்போங் லென்தாங் அருகிலுள்ள லிபிஸ்–ஜெராந்துட் சாலையின் 18-ஆவது கிலோமீட்டரில் ஏற்பட்டது.
ஷாஃபிக் ஃபேன்சி ரோஸ்லி (41) ஓட்டிய கனரக வாகனம் கூர்மையான வளைவை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து எதிர் பாதையில் சென்று மற்றொரு சரக்கு வாகனத்துடன் மோதியது.
அதன் பின்னால் வந்திருந்த கார் விபத்தைக் தவிர்க்க முயன்றபோதும் அதிலும் சிக்கியது. சரக்கு வாகன ஓட்டுநர் காயமடைந்து லிபிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்; காரின் ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
சம்பவத்தை பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 11:12 am
பள்ளிகளில் ஐஎஸ் தாக்கத்தைத் தடுக்க கல்வி அமைச்சகம் கடும் கண்காணிப்பு
March 13, 2026, 10:43 am
நிதி அறிக்கையில் போலி தகவல்கள்: முன்னாள் நிறுவனத் தலைவருக்கு கைது உத்தரவு
March 13, 2026, 10:22 am
புனித மக்காவில் உம்ரா யாத்திரிகர்கள் தங்கும் பிரபல விடுதியில் தீ விபத்து
March 13, 2026, 10:04 am
ஹிஷாமுடின் அம்னோவுக்குத் திரும்பத் தயாராக உள்ளார்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்: கோபிந்த் சிங்
March 12, 2026, 10:56 pm
ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரதமரின் அரசியல் செயலாளருடன் பேச்சுவார்த்தை
March 12, 2026, 6:57 pm
