நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் இஸ்லாமிய சமயத் துறையின் அதிரடி சோதனை: கள்ள உறவில் சிக்கிய காதல் ஜோடி

குளுவாங்: 

மற்றொருவரின் மனைவியுடன் கள்ள உறவில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர், வீட்டின் மேல்சுவரில் மறைந்து தப்பிக்க முயன்றபோது இஸ்லாமிய சமய விவகார அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நேற்று காலை 10.30 மணியளவில், பொதுமக்களின் தகவலைத் தொடர்ந்து ஜொகூர் மாநில இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள் ஒரு வரிசை வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது முப்பது வயதுடைய ஆண் ஒருவர் வீட்டின் மேல்சுவரில் மறைந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பின்னால் உள்ள கதவு வழியாக தப்பிக்க முயன்றபோதும் அதிகாரிகள் வீடு முழுவதையும் முற்றுகையிட்டிருந்ததால் அது தோல்வியடைந்தது.

ஆரம்பகட்ட தகவலின்படி, அந்த இளைஞர் அடிக்கடி அந்த வீட்டிற்கு வருவதாகவும், பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்றதும் குழந்தை பள்ளிக்குச் சென்றதும் அவர் வருவதாகவும் புகார் கிடைத்திருந்தது.

சம்பவ நாள், சந்தேகநபர் தனது வாகனத்தை வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்தி வைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகள் வீட்டின் கதவைத் தட்டியபின் சுமார் 10 நிமிடங்கள் கழித்து பெண் ஒருவர் கதவைத் திறந்தார். ஆரம்பத்தில் அவர் வீட்டில் தனியாக இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அதிகாரிகள் சந்தேகப்பட்டு வீட்டைச் சோதித்தபோது, ஒரு அறையில் மேல்சுவர் திறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலே சென்று பார்த்தபோது, அந்த இளைஞர் நீர்த் தொட்டியின் அருகில் தூணைப் பிடித்தபடி மறைந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், இந்த இருவரும் கடந்த ஒரு ஆண்டாக அறிமுகமாக இருந்ததாகவும், இருவரின் துணையர்களுக்கும் இது தெரியாததாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, ஜொகூர் மாநில ஷரியா குற்றச் சட்டம் 1997 பிரிவு 27 கீழ் கள்ள உறவு குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset