நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர் பதற்றத்திற்கு மத்தியில் கடல் பணியில் 18 மலேசியர்கள்

கோலாலம்பூர்: 

மலேசியாவின் கடலுக்கு வெளியேயான (ஆஃப்ஷோர்) பணியில் ஈடுபட்டுள்ள மலேசிய கடல்கடந்த கடற்படையினர் சங்கத்தின் (MOS) 18 மலேசிய கடலோடிகள், தற்போது மோதல் மண்டலமாக வகைப்படுத்தப்பட்ட மேற்கு ஆசியாவின் பல பகுதிகளில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவர்கள் தற்போது அந்தப் பிராந்தியத்தில் எண்ணெய், எரிவாயு தொழில்துறைக்கான கப்பல்களில் பணியாற்றி வருகின்றனர் என்று மலேசிய கடலுக்கு வெளியான கடலோடிகள் சங்கத் தலைவர் கேப்டன் துங்கு இஸ்மாயில் துங்கு யாஹயா தெரிவித்தார்.

இதுவரை பெரும்பாலானவர்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கப்பல் நிறுவனங்கள், கப்பல் மேலாண்மை அமைப்புகள் கடுமையான பாதுகாப்பு கண்காணிப்புடன் செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

“உயர் அபாயம் கொண்ட பகுதிகளில் செயல்படும் கடலுக்கு வெளியான தொழில்துறைக்கு குறிப்பிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன. இந்த விஷயம் எப்போதும் இயக்குநர்கள், கப்பல் நிறுவனங்களால் கண்காணிக்கப்படுகிறது.

 "சம்பந்தப்பட்ட கடலோடிகள் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள துபாய், அபுதாபி பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்," என்றார்  அவர்.

இருப்பினும், குறிப்பாக உயர் அபாயம் உள்ள பகுதிகளில் பணிபுரியும் மலேசிய கடலோடிகளின் பாதுகாப்பும் நலனும் எப்போதும் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“அபாயம் அதிகமான பகுதிகளில் பணிபுரியும் கடலோடிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதில் பாதுகாப்பு ஏற்பாடுகள், காப்பீட்டு பாதுகாப்பு, மோதல் பகுதிகளில் பணியாற்றுவதற்கான இழப்பீடு ஆகியவை அடங்கும்,” என்றார்.

இதற்கிடையில், அந்தச் சங்கம் தற்போதைய நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு, செயல்பாட்டு பகுதிகளில் உள்ள உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 28 முதல் மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, டெஹ்ரான் வளைகுடா நாடுகளில் அமெரிக்க நலன்களைக் குறிவைத்து பதிலடி தாக்குதல்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset