செய்திகள் மலேசியா
செந்தூல் தமிழ்ப்பள்ளியின் கணினி மையம் திறப்பு விழா கண்டது; பத்து தொகுதியில் உள்ள தமிழ்பள்ளிகளின் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும்: பிரபாகரன்
கோலாலம்பூர்:
பத்து நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தமிழ்பள்ளிகளின் மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் இதனை கூறினார்.
செந்தூல் தமிழ்ப்பள்ளியில் கணினி மையம் அமைக்கப்பட வேண்டும் என என்னிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கை சரியானதாக இருந்தது என்ற அடிப்படையில் அப்பள்ளிக்கு 50 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது.
இதுவொரு சின்ன தொகையாக இருந்தாலும் அதை வைத்து பிரமாண்டமான முறையில் கணினி மையத்தை பள்ளி நிர்வாகம் அமைத்துள்ளது.
இவ்வேளையில் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் உட்பட அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கணினி மையம் மாணவர்களின் கல்விக்கும் அவர்களின் மேம்பாட்டிற்கும் பயனாக இருக்கும் என நம்புகிறேன்.
அதே வேளையில் பள்ளி மாணவர்கள் இம்மையத்தை முறையாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே பத்து நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தப்படும்.
குறிப்பாக மாணவர்கள் கல்வியில் சாதிப்பதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 12:44 pm
ஜொகூர் இஸ்லாமிய சமயத் துறையின் அதிரடி சோதனை: கள்ள உறவில் சிக்கிய காதல் ஜோடி
March 13, 2026, 12:43 pm
மீன் விலை உயர்த்தப்படக்கூடாது: மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம்
March 13, 2026, 12:41 pm
போர் பதற்றத்திற்கு மத்தியில் கடல் பணியில் 18 மலேசியர்கள்
March 13, 2026, 11:12 am
பள்ளிகளில் ஐஎஸ் தாக்கத்தைத் தடுக்க கல்வி அமைச்சகம் கடும் கண்காணிப்பு
March 13, 2026, 10:43 am
நிதி அறிக்கையில் போலி தகவல்கள்: முன்னாள் நிறுவனத் தலைவருக்கு கைது உத்தரவு
March 13, 2026, 10:23 am
லிபிஸ் மாவட்டத்தில் தொடர்ச்சியான சாலை விபத்துகள்: முதியவர் உட்பட இருவர் உயிரிழப்பு
March 13, 2026, 10:22 am
புனித மக்காவில் உம்ரா யாத்திரிகர்கள் தங்கும் பிரபல விடுதியில் தீ விபத்து
March 13, 2026, 10:04 am
ஹிஷாமுடின் அம்னோவுக்குத் திரும்பத் தயாராக உள்ளார்
March 12, 2026, 10:57 pm
