செய்திகள் மலேசியா
புனித மக்காவில் உம்ரா யாத்திரிகர்கள் தங்கும் பிரபல விடுதியில் தீ விபத்து
கோலாலம்பூர்:
புனித மக்கா நகரில் தென்கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக மலேசிய யாத்திரிகர்கள் அடிக்கடி தங்கும் ஹோட்டல் மீரா அஜ்யாத் தீ விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அய்ஜாத் பகுதியில் அமைந்துள்ள இந்த விடுதியில் நேற்று மாலை தீப்பற்றியதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகளில், கட்டிடத்தை தீ வேகமாக சூழ்ந்து எரிவது காணப்படுகிறது.
இந்நிகழ்வில் மலேசியா உள்ளிட்ட உம்ரா யாத்திரிகர்கள் பாதிக்கப்பட்டார்களா அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து வெளிநாட்டு அலுவலகத்திடமிருந்து மேலதிக தகவல்களை ஊடகங்கள் எதிர்பார்த்து வருகின்றன.
சமூக வலைதளங்களில் பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். விடுதியில் தங்கியிருந்ததாக கூறும் இந்தோனேசிய யாத்திரிகர் ஒருவர், தீ பரவுவதற்கு முன்பே தங்களை பாதுகாப்பாக வெளியேற்றியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மெக்காவில் உள்ள ஒரு மதபோதகர் பகிர்ந்த காணொலியில், தீ விபத்து ஏற்பட்ட விடுதியின் எதிரே உள்ள சாலையில் மக்கள் பதற்றத்துடன் திரண்டிருந்தது காணப்பட்டது. மெக்கா நகரின் ஒரு பகுதியில் கரும்புகை சூழ்ந்திருந்ததாகவும் மற்ற யாத்திரிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், முன்பு அந்த விடுதியில் தங்கியிருந்த மலேசியர்களும் இந்தச் சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். எனினும், உயிரிழப்பு அல்லது பெரிய சேதம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 11:12 am
பள்ளிகளில் ஐஎஸ் தாக்கத்தைத் தடுக்க கல்வி அமைச்சகம் கடும் கண்காணிப்பு
March 13, 2026, 10:43 am
நிதி அறிக்கையில் போலி தகவல்கள்: முன்னாள் நிறுவனத் தலைவருக்கு கைது உத்தரவு
March 13, 2026, 10:23 am
லிபிஸ் மாவட்டத்தில் தொடர்ச்சியான சாலை விபத்துகள்: முதியவர் உட்பட இருவர் உயிரிழப்பு
March 13, 2026, 10:04 am
ஹிஷாமுடின் அம்னோவுக்குத் திரும்பத் தயாராக உள்ளார்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்: கோபிந்த் சிங்
March 12, 2026, 10:56 pm
ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரதமரின் அரசியல் செயலாளருடன் பேச்சுவார்த்தை
March 12, 2026, 6:57 pm
