
செய்திகள் மலேசியா
இனதுவேஷம் செய்த மஞ்சோய் சட்டமன்ற உறுப்பினர் மீது சட்ட நவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?: சம்பவத்தை ஏற்படுத்திய பெண்மணிக்கு மேலும் 3 நாட்கள் தடுப்புக்காவல்
ஈப்போ:
பேராக் மாநில தேசிய தின கொண்டாட்டத்தில் பெண்மணி ஒருவர் திடிரென பேராக் சுல்தானை நெருங்கி அசம்பாவிதத்தை உருவாக்கினார். அப் பெண்மணியின் தடுப்புக்காவல் வழக்கு இன்றுடன் (3.8.2025) முற்றுப்பெற்றது.
இருப்பினும், இவ்விசாரணை இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதால் அப்பெண்மணியை மேலும் மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில துணை போலீஸ்படை தலைவர் டி சி பி முகமட் அஸ்லான சடாரியை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறியதாக பேராக் மாநில ஒற்றுமை, சுகாதாரம், மனிதவளம் மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இவ்விவகாரத்தில் சிக்கிய பெண்மணி ஒரு சீன பெண்மணி என்று மஞ்சோய் சட்டமன்ற உறுப்பினர் ஹாபிஸ் சப்ரி தமது முகநூலில் பதிவிட்டுள்ளதை பொதுமக்களுக்கும், போலீஸ் தரப்பினருக்கும் நன்கு அறிவார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் மக்களின் ஒற்றுமை காக்க வேண்டும். ஆனால், இவர் இன துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று அவர் சாடினார்.
இவ்விவகாரத்தை போலீஸ் தரப்பினர் கடுமையாக கருதுகின்றனர். ஆகையால், ஆதாரங்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். அத்துடன், போலீஸ் தரப்பினர் இம்முறை முறையாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்டு சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வாய்புண்டு என்று அவர் சொன்னார்.
இந்நாட்டு மக்கள் பல இனத்தவராகும் இருந்தாலும் மக்கள் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், நாட்டை குழப்பி வருபவர்கள் சுயநலகார சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது இச்சம்பவங்கள் ஊர்ஜிதமாகியுள்ளது. அண்மையில் தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டைகளில் அரபிக் மொழியில் எழுதப்பட வேண்டும் என்று தம் கருத்தை பதிவிட்டுள்ளார் என்பதை நாட்டு மக்கள் அறிந்ததே.
ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 8:43 am
செராஸில் நாய் தாக்கியதில் சிறுவன் படுகாயம்
September 3, 2025, 11:13 pm
ஜொகூர் ஸ்ரீ மேடானில் 2.9 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது
September 3, 2025, 7:09 pm
ரோன் 95, ரோன் 97, டீசல் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை
September 3, 2025, 7:08 pm
ஷாராவின் மரணம் தற்செயலாக விழுந்தது அல்லது தள்ளி விட்டதால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை: நிபுணர்
September 3, 2025, 7:07 pm
ஆலய திருவிழாவில் துப்பாக்கிச் சூடு; இந்து சமயத்தை இழிவுப்படுத்த வேண்டாம்: மஹிமா வலியுறுத்தல்
September 3, 2025, 7:05 pm
மஇகா, மசீச நீண்ட கால அனுபவம் கொண்ட கட்சிகள்; அவற்றை பாஸ் எளிதில் ஏமாற்றி விட முடியாது: ஜம்ரி
September 3, 2025, 6:07 pm
சபா மாநிலத் தேர்தலில் மஇகா வேட்பாளரை நிறுத்தாது: டத்தோஸ்ரீ சரவணன்
September 3, 2025, 6:03 pm
தேசிய முன்னணியுடனான நிலைப்பாடு குறித்து மஇகா உயர்மட்ட தலைவர்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்: டத்தோ ராஜா
September 3, 2025, 2:04 pm