நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம், சூடான் நிலச்சரிவின் துயரங்களுக்கு டத்தோஸ்ரீ அன்வார் வருத்தம் தெரிவித்தார்

கோலாலம்பூர்:

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம், சூடான் நிலச்சரிவின் துயரங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருத்தம் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானைத் தாக்கிய நிலநடுக்கத்திற்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் இந்த நிலநடுக்கம் பல உயிர்களைப் பலிகொண்டது. 

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை துயரத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இதே போல் சூடானில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியைக் கேட்டதும் பிரதமர் இன்று தனது முகநூல் பதிவில் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கலும் பிரார்த்தனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரமான தருணத்தில் மலேசியா ஆப்கானிஸ்தான், சூடான் மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset