நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன் 95, ரோன் 97, டீசல் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை

புத்ராஜெயா:

ரோன் 95, ரோன் 97, டீசல் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என நிதியமைச்சு கூறியது.

ரோன் 97 பெட்ரோல், டீசலின் விலை நாளை முதல் செப்டம்பர் 10 வரை மாறாமல் இருக்கும்.

தீபகற்ப மலேசியாவில் ரோன் 97 விலை லிட்டருக்கு 3.16 ரிங்கிட்டாகவும், டீசல் விலை லிட்டருக்கு 2.88 ரிங்கிட்டாகவும் தொடரும்.

சபா, சரவா, லாபுவானில் ரோன் 95 விலை லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டாகவும் டீசல் விலை 2.15 ரிங்கிட்டாகவும் தொடரும்.

உலக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலனை பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நிதியமைச்சு ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset