நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸில் நாய் தாக்கியதில் சிறுவன் படுகாயம்

செராஸ்:

செராஸில் நாய் தாக்கியதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்தான்.

இந்த சம்பவம் இங்குள்ள செரஸின் தாமான் மேகாவைச் சுற்றி நடந்ததாகக் கருதப்படுகிறது.

இச்சம்பவத்தில், நாய் கடித்ததால் ஒரு சிறுவன் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்தான்.

அந்த பயங்கரமான தருணத்தை சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தூரத்திலிருந்து படம் பிடித்தனர்.

பின்னர் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறுவனைக் காப்பாற்ற முயற்சிப்பதைக் கண்டனர்.

11 வினாடிகள் கொண்ட வைரல் வீடியோவில் துரதிர்ஷ்டவசமான குழந்தை சில வினாடிகள் நாயுடன் போராடி, பின்னர் வெற்றிகரமாக தப்பிப்பதைக் காட்டுகிறது.

மேலும் வைரலாகி வரும் படங்களும் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பதும், பாதிக்கப்பட்டவரின் தலையில் பல இடங்களில் தோல் கிழிந்த அடையாளங்கள் தெளிவாகக் காட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset