
செய்திகள் மலேசியா
ஷாராவின் மரணம் தற்செயலாக விழுந்தது அல்லது தள்ளி விட்டதால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை: நிபுணர்
கோத்தா கினபாலு:
ஷாராவின் மரணம் தற்செயலாக விழுந்தது அல்லது தள்ளி விட்டதால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
தடயவியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியு இதனை கூறினார்.
முதலாம் படிவ மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணை இன்று கோத்தா கினாபாலுவில் உள்ள மரண விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கியது.
இதில் சாட்சியமளித்த அவர், ஷாராவின் மரணம் தற்செயலாக விழுந்ததாலோ அல்லது சம்பவ இடத்தில் நின்ற நிலையில் இருந்து தள்ளப்பட்டதாலோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 150 பிரேத பரிசோதனைகளை நடத்திய அனுபவத்தின் ஷாராவிற்கு ஏற்பட்ட மரணத்திற்கு முந்தைய காயங்கள் குறித்து தனது தொழில்முறை கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்தில் பரிசோதனை நடத்துவதோடு மட்டுமல்லாமல், ரேடியோகிராஃப் அறிக்கைகள், சிடி ஸ்கேன் , சிடிஏ உள்ளிட்ட ஷாராவின் மருத்துவ பதிவுகளையும் அவர் மதிப்பாய்வு செய்ததாக அவர் கூறினார்.
இறந்தவரின் தங்குமிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மூன்றாவது மாடியில் உள்ள கான்கிரீட் வேலியில் பொருத்தப்பட்டுள்ள தரையிலிருந்து மேல் கிடைமட்ட இரும்பு கம்பி வரையிலான உயரம் 118 செ.மீ ஆகும்.
மரண விசாரணை அதிகாரி அமீர் ஷா அமீர் ஹாசனுக்கு முன் ஐந்து பக்க எழுத்துப்பூர்வ அறிக்கையைப் படித்தபோது அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 8:43 am
செராஸில் நாய் தாக்கியதில் சிறுவன் படுகாயம்
September 3, 2025, 11:13 pm
ஜொகூர் ஸ்ரீ மேடானில் 2.9 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது
September 3, 2025, 7:09 pm
ரோன் 95, ரோன் 97, டீசல் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை
September 3, 2025, 7:07 pm
ஆலய திருவிழாவில் துப்பாக்கிச் சூடு; இந்து சமயத்தை இழிவுப்படுத்த வேண்டாம்: மஹிமா வலியுறுத்தல்
September 3, 2025, 7:05 pm
மஇகா, மசீச நீண்ட கால அனுபவம் கொண்ட கட்சிகள்; அவற்றை பாஸ் எளிதில் ஏமாற்றி விட முடியாது: ஜம்ரி
September 3, 2025, 6:07 pm
சபா மாநிலத் தேர்தலில் மஇகா வேட்பாளரை நிறுத்தாது: டத்தோஸ்ரீ சரவணன்
September 3, 2025, 6:03 pm
தேசிய முன்னணியுடனான நிலைப்பாடு குறித்து மஇகா உயர்மட்ட தலைவர்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்: டத்தோ ராஜா
September 3, 2025, 2:04 pm