நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா, மசீச நீண்ட கால அனுபவம் கொண்ட கட்சிகள்; அவற்றை பாஸ் எளிதில் ஏமாற்றி விட முடியாது: ஜம்ரி

கோலாலம்பூர்:

மஇகா, மசீச நீண்ட கால அனுபவம் கொண்ட கட்சிகள். அவற்றை பாஸ் எளிதில் ஏமாற்றி விட முடியாது.

தேசிய முன்னணி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் இதனை கூறினார்.

16ஆவது பொதுத் தேர்தலில் தேசியக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட மஇகா, மசீச கட்சிகளை  பாஸ் எளிதில் ஏமாற்றி விட முடியாது.

காரணம் இரு கட்சிகளும் நாட்டின் அரசியல் களத்தில் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.

மஇகா, மசீச கட்சிகள்  நாட்டின் அரசியல் களத்திற்குப் புதியவை அல்ல.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தங்கள் அரசியல் பயணம் முழுவதும் பல்வேறு ஏற்ற தாழ்வுகள்,  கண்ணிவெடிகளைக் கடந்து வந்துள்ளன.

நாட்டின் அரசியல் களத்தில் மஇகா, மசீச கட்சிகள் பெர்சத்து, பாஸ்  கெராக்கானை காட்டிலும் நீண்ட காலத்திற்கு முன்பே நன்கு அறிந்தவை என்று நான் நம்புகிறேன்.

மேலும் இனங்களுக்கிடையேயான புரிதல், மிதவாத அரசியலின் மாதிரியின் மூலம் நாட்டின் அரசியல் சூழல் மஇகா, மசீச, அம்னோவின் இணை நிறுவனர்களான தேசிய முன்னணியின் தெளிவான நிலைப்பாடாக மாறியுள்ளது என்று அவர்  கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset