நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலய திருவிழாவில் துப்பாக்கி சூடு; இந்து மதத்தின் போதனைகளைப் பிரதிபலிக்கவில்லை: பாப்பாராயுடு

ஷாஆலம்:

ஆலய திருவிழாவில் நடந்த துப்பாக்கி சூடு இந்து மதத்தின் போதனைகளைப் பிரதிபலிக்கவில்லை.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.

ஆலய திருவிழாவின் போது நடந்த 
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நான் மிகவும் தீவிரமாகப் பார்க்கிறேன். 

இது இந்து நம்பிக்கையின் அமைதி, நல்லிணக்கத்தை பிரதிபலிக்கவில்லை.

எனவே மதக் கொண்டாட்டங்கள் அல்லது செயல்பாடுகளில் எந்த வகையான வன்முறையும் ஒருபோதும் இருக்கக்கூடாது.

இந்தச் செயலை வண்மையாகக் கண்டிக்க வேண்டும்.

மேலும் சிலாங்கூர் மாநிலத்தின் எந்தப் பகுதியிலோ அல்லது நாடு முழுவதிலுமோ இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும்.

ஆக இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கும், சோதனைகள் நடத்துவதற்கும், சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கும்  போலிஸ் அதிகாரிகளுக்கு எனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset