நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியுடனான நிலைப்பாடு குறித்து மஇகா உயர்மட்ட தலைவர்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்: டத்தோ ராஜா

கோலாலம்பூர்:

தேசிய முன்னணியுடனான நிலைப்பாடு குறித்து மஇகா உயர்மட்ட தலைவர்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.

அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஆர்டி  ராஜாசேகரன் இதனை வலியுறுத்தினார்.

கெடா, பினாங்கு, கூட்டரசுப் பிரதேசம், சிலாங்கூர் உட்பட பல மஇகா மாநிலக் கூட்டங்கள், கட்சி தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்க ஒரு தீர்மானத்தை எழுப்பியுள்ளன.

ஆக தேசிய முன்னணிக்குள்  மஇகாவின் நிலைப்பாடு குறித்து உயர்மட்டத் தலைமை உடனடியாக இறுதி முடிவை எடுக்க வேண்டும்.

இது ஒரு தெளிவான முடிவை கட்சி உறுப்பினர்களுக்கு உறுதியாக வழங்கும்.

மேலும் அவர்கள் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராக உதவும்.

மாநில அளவில் உறுப்பினர்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிப்பதால், 

அடிமட்ட மக்களின் குரலை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்று டத்தோ ராஜசேகரன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset