நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் ஸ்ரீ மேடானில் 2.9 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது

பத்து பகாட்:

ஜொகூர் ஸ்ரீ மேடான், பாரிட் சுலோங்கில் இன்று மாலை மற்றொரு பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 24 அன்று சிகாமட்டில் ஏற்பட்ட முதல் சம்பவத்திற்குப் பிறகு எட்டாவது நிலநடுக்கத்தைப் பதிவு செய்தது.

யொங் பெங்கிலிருந்து தென்மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) அதன் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 1.95 டிகிரி வடக்கு, 102.9 டிகிரி கிழக்கு மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தின் நிலைமை மற்றும் வளர்ச்சியை மெட் மலேசியா தொடர்ந்து கண்காணிக்கும் என அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset