
செய்திகள் உலகம்
பிரபல மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள்: ஆஸ்திரேலிய மாநிலம் தடை
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்தில் பிரபல மீன் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் சோயா சாஸ் போத்தல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
அவை பல ஆசிய உணவகங்களிலும் மளிகைக் கடைகளிலும் முக்கிய இடம் வகிக்கின்றன.
ஆனால் அவை பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுவதால் அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க அவை தடை செய்யப்பட்டுள்ளதாக சௌத் ஆஸ்திரேலியாவின் சுற்றுப்புற அமைச்சர் கூறியிருக்கிறார்.
அவை மறுபயனீடு செய்யக்கூடிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருந்தாலும் சிறியதாக இருப்பதால் அவற்றை மறுபயனீடு செய்ய இயலாமல் போகிறது என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இதற்கு முன் பிளாஸ்டிக் பைகள், உறிஞ்சிகள் ஆகியவை சுற்றுப்புறப் பாதுகாப்புக்காகத் தடை செய்யப்பட்டன.
ஆதாரம்: BBC
தொடர்புடைய செய்திகள்
September 3, 2025, 4:53 pm
இலங்கைக்கு சுற்றுலா: இந்தியா்கள் மீண்டும் முதலிடம்
September 3, 2025, 1:24 pm
காஸா மக்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசேர்த்த சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள்
September 3, 2025, 1:06 pm
துபாயில் ஏன் வெவ்வேறு நிற ரூஃப் கொண்ட டாக்சிகள் வலம் வருகின்றன?
September 3, 2025, 10:58 am
இந்தோனேசியாவின் இலவச உணவு திட்டம் 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு
September 3, 2025, 9:04 am
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 2, 2025, 7:53 pm
மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
September 2, 2025, 11:31 am
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீர் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்: சிங்கப்பூர் NEA அறிவிப்பு
September 1, 2025, 9:10 pm