செய்திகள் உலகம்
எரிசக்தி நெருக்கடி தீவிரம்: கியூபாவில் நாடு முழுவதும் இருள்
ஹவானா:
எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்த நிலையில், கியூபா முழுவதும் மின்வலையமைப்பு சீர்குலைந்ததால் நாடு முழுவதும் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது.
மின்நிலையங்களில் கோளாறு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், சம்பவத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கும் இந்த நாடு, கடந்த சில மாதங்களாக கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதால், மின்சாரம் மாறிமாறி வழங்கப்பட்டு வந்தது.
தினசரி தேவைக்காக மிகுந்த அளவு எரிபொருள் தேவைப்படுகின்ற நிலையில், உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருப்பது நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது.
மூன்று மாதங்களாக முக்கிய எரிபொருள் இறக்குமதி கிடைக்காதது, மேலும் அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம் ஆகியவை இந்த நிலையை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிபர் மிகுவேல் டியாஸ்-கனெல் தெரிவித்தார். பழமையான மின்சார கட்டமைப்பும் அடிக்கடி மின்தடைக்கு காரணமாக உள்ளது.
இந்த நெருக்கடியால் மக்கள் அதிருப்தி அதிகரித்து, சில இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மின்சாரம், உணவு, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை காரணமாக கலவரங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தை நிலைநிறுத்த வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் முயற்சிகளை அரசு பரிசீலித்து வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 12:59 pm
குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம்: 30 வயது ஆடவர் கைது
March 17, 2026, 10:53 am
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இங்கிலாந்தின் அணுகுமுறைக்கு டிரம்ப் கடும் அதிருப்தி
March 17, 2026, 10:36 am
பாக்தாதில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
March 16, 2026, 12:03 pm
‘தவறான கணிப்பு அல்ல, போர் குற்றம்’ – WHO கடும் கண்டனம்
March 16, 2026, 11:58 am
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்: 153 மருத்துவக் கட்டமைப்புகள் சிதைவு
March 16, 2026, 11:03 am
பாக்தாத், துபாய் சர்வதேச விமான நிலையங்கள் தாக்குதல்
March 16, 2026, 11:02 am
இஸ்ரேல் தொடர்ந்து 16-வது நாளாக அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடியுள்ளது
March 16, 2026, 10:04 am
ஹார்முஸ் பாதை முடக்கம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
March 16, 2026, 9:47 am
