நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்

ஜெனிவா:

அனைத்துலக உணவுத்துறை சந்தையில் மிகப்பெரிய நிறுவனமான நெஸ்லே தனது தலைமை செயல்முறை அதிகாரியான லாரெண்ட் ஃப்ரீக்ஸ் உடனடியாக பணி நீக்கம் செய்தது.

அவர் தனது சக ஊழியருடன் உறவில் இருந்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

நெஸ்லேவின் வணிக நடத்தை விதிகளை மீறிய நேரடி துணை அதிகாரியுடனான வெளிப்படுத்தப்படாத காதல் உறவு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து லாரன்ட் ஃப்ரீக்ஸ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைவர் பால் புல்கே, முன்னணி இயக்குனரான பாப்லோ இஸ்லா ஆகியோரால் மேற்பார்வையிடப்பட்ட விசாரணைக்கு, வெளிப்புற ஆலோசகரின் ஆதரவுடன் உத்தரவிட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.

ஃப்ரீக்ஸின் பணிநீக்கம் ஒரு அவசியமான முடிவு. நெஸ்லேவின் மதிப்புகளும் நிர்வாகமும் எங்கள் நிறுவனத்தின் வலுவான அடித்தளமாகும். 

அவரின் பல வருட சேவைக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று புல்கே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, அதன் கிளை நிறுவனமான நெஸ்பிரெஸ்ஸோவின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பிலிப் நவ்ரத்தில் குழுமத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக போர்ட் உறுப்பினர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். 

அனைத்துலக சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனம் தான், மிகவும் பிரபலமான நெஸ்பிரெஸ்ஸோ காஃபி கேப்சூல்ஸ், கிட்கேட் சாக்லேட் போன்ற பல பிரபலமான உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset