செய்திகள் வணிகம்
ஈரான், அமெரிக்க பதற்றத்தின் மத்தியில் ரிங்கிட் வலுவான தொடக்கம்
கோலாலம்பூர்:
அமெரிக்கா, ஈரான் இடையேயான தொடர்ச்சியான மோதல் காரணமாக உலகளாவிய சந்தைகள் பதற்றத்தில் இருப்பினும் இன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் வலுவாகத் தொடங்கியுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு, உள்ளூர் நாணயம் அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9420/9605 ஆக வலுவடைந்தது. இது திங்கட்கிழமை முடிவில் இருந்த 3.9590/9655 நிலையை விட உயர்வாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானில் போர் விரைவில் முடிவடையக்கூடும் என்று கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தை மீண்டதாகவும், அமெரிக்க கருவூலப் பத்திர விளைச்சல் குறைந்து, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்ததாகவும் மலேசிய முவமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அப்ஸானிசம் அப்துல் ரஷித் தெரிவித்தார்.
“அந்த வாக்குறுதி எவ்வளவு காலம் நிலைக்கும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் பங்குச் சந்தை உயர்வைப் பதிவு செய்துள்ளது.
“ஜி7 நாடுகளும் தங்களது மூலோபாய எண்ணெய் கையிருப்புகளை வெளியிடும் வாய்ப்பு குறித்து விவாதித்துள்ளன. இது ஈரானில் நடைபெறும் போர் தங்களது பொருளாதாரங்களுக்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து அவர்கள் கொண்டுள்ள கவலையை வெளிப்படுத்துகிறது,” என்றார் அவர்.
திங்கட்கிழமை ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக 0.36 சதவீதம் குறைந்து RM3.9623 நிலையில் முடிவடைந்தது. அதே நேரத்தில் அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 99.175 புள்ளிகளில் உயர்ந்த நிலையில் இருந்தது.
“பிரென்ட் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது நல்ல முன்னேற்றமாக இருந்தாலும் இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. இதற்கிடையில் ஈரான் புதிய உச்சத் தலைவரை நியமித்துள்ளதுடன் போருக்கான கடுமையான நிலைப்பாடு தொடரக்கூடும்,” என்று முஹம்மத் அப்ஸானிசம் தெரிவித்தார்.
“இதன் காரணமாக, இன்று ரிங்கிட் குறுகிய வரம்புக்குள் வர்த்தகம் செய்யப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.
வர்த்தகத் தொடக்கத்தில், ஜப்பான் யென்னைத் தவிர மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் சற்றுக் குறைந்தது. ஜப்பான் யெனை ஒப்பிடுகையில் அது 2.4967/5086 ஆக வலுவடைந்தது; திங்கட்கிழமை முடிவில் அது 2.4992/5035 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிங்கிட் பிரிட்டன் பவுண்டுக்கு எதிராக 5.2910/3158 ஆக குறைந்தது. அதேபோல் யூரோவுக்கு எதிராக 4.5786/6001 ஆக சரிந்தது.
இதற்கிடையில், பெரும்பாலான ஆசியான் நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் உயர்ந்திருந்தாலும், தாய்லாந்து பாட்டிற்ற்கு எதிராக அது 12.4095/4787 ஆகக் குறைந்துள்ளது.
ரிங்கிட் பிலிப்பைன்ஸ் பேசோவுக்கு எதிராக 6.62/6.66 ஆக வலுவடைந்துள்ளது. சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.0910/1058 ஆக சற்று உயர்ந்தது. மேலும் இந்தோனேசிய ரூபியாக்கு எதிராக 232.5/233.7 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, இந்திய ரூபாய் ஒரு ரிங்கிட்டிற்கு 23.25 காசாக விற்பனையில் உள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 10:10 am
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணவீக்கம் சரிந்துள்ளது: அர்மிசான்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
June 18, 2026, 4:49 pm
கர்சர் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதால் கோடீஸ்வரராகும் இந்தியர், பாகிஸ்தான் இளைஞர்
June 15, 2026, 2:22 pm
போர் நிறுத்தம் எதிரொலி: சரிந்தது எண்ணெய் விலை
June 15, 2026, 12:24 pm
டுரியானின் அறுவடைக்காலம் தொடங்குகிறது: விலை ஏறலாம் என விற்பனையாளர்கள் கவலை
June 11, 2026, 6:06 pm
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்: பணவீக்க அதிர்ச்சியால் தள்ளாடும் டாலர்
June 11, 2026, 6:01 pm
லக்சாவிலிருந்து கலை உலகம் வரை: மூன்று தலைமுறைப் பெண்களின் வெற்றிப் பயணம்
June 10, 2026, 10:39 am
