செய்திகள் வணிகம்
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடிவுக்கு வந்த எம்.பி.ஓ திரைப்பட நிறுவனம்
பெட்டாலிங் ஜெயா:
திரைப்பட அரங்குகளை இயக்கி வந்த எம்.பி.ஓ சினிமாஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
எம்.பி.ஓ வெளியிட்ட அறிக்கையில், பல ஆண்டுகளாக திரைப்பட அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது தங்களுக்கு பெருமை அளிப்பதாகவும், திரையரங்குகளில் ரசிகர்கள் பகிர்ந்த மகிழ்ச்சி, உணர்ச்சிப்பூர்வ தருணங்கள் எப்போதும் நினைவில் நிற்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“எங்களின் இருக்கைகளையும், இதயங்களையும் நிரப்பிய அனைத்து பார்வையாளர்களுக்கும் நன்றி,” என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலின் போது 2020-ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள தனது திரையரங்குகளை மூடியிருந்த இந்த நிறுவனம், பின்னர் ஒரு புதிய நிர்வாகத்தின் கீழ் 2021-ஆம் ஆண்டு மீண்டும் செயல்படத் தொடங்கியது. அந்த நேரத்தில் கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் நிறுவனம் அதன் சொத்துகளை கையகப்படுத்தியிருந்தது.
சிலாங்கூர், மலாக்கா, பேராக், ஜொகூர் மாநிலங்களில் அமைந்த எட்டு திரையரங்குகளை எம்.பி,ஓ நிறுவனம் இயக்கி வந்தது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
