நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாரா 100 ரிங்கிட் உதவித் தொகையை நேற்று 850,000 மலேசியர்கள் பயன்படுத்தியுள்ளனர்: நிதியமைச்சு

புத்ராஜெயா:

சாரா 100 ரிங்கிட் உதவித் தொகையை நேற்று 850,000 மலேசியர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

நிதியமைச்சு ஓர் அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியது.

100 ரிங்கி அடிப்படை ரஹ்மா பங்களிப்பை முதல் நாளான நேற்று இரவு 9.30 மணி நிலவரப்படி சுமார் 850,000 பேர் பயன்படுத்தி உள்ளனர்.

இதன் மூலம்  அவர்கள் கிட்டத்தட்ட 50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளனர்.

அதிக அளவிலான பயன்பாட்டு அளவு காரணமாக,  திடீர் பரிவர்த்தனை பாதிப்புகளை சந்தித்ததாக நிதியமைச்சு கூறியது.

இதைத் தொடர்ந்து  MyKasih நெட்வொர்க் மூலம் இயக்கப்படும் கட்டண முனைய அமைப்பு பல இடங்களில் குறிப்பிடத்தக்க செயல்திறன் சரிவை சந்தித்தது.

இது மெதுவாக இயங்கினாலும், பரிவர்த்தனைகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன என்று அமைச்சு அந்த அறிக்கையில் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset