நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுதந்திர தினத்தை கொண்டாடிய மலேசியர்களுக்கும் பிரதமருக்கும் சீன அதிபர் வாழ்த்துகளை தெரிவித்தார்

தியான்ஜின்:

சுதந்திர தினத்தை கொண்டாடிய மலேசியர்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும்  சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்துகளை தெரிவித்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார்.

அப்போது மலேசிய மக்களுக்கு அதன் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தியான்ஜின் மெய்ஜியாங் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2025 காலா விருந்தில் பேசிய ஜி ஜின்பிங், ல

மலேசியாவை போன்று கஜகஸ்தான் அதன் சுதந்திர தினத்தைக் கொண்டாடியதற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பழைய, புதிய நண்பர்களின் ஒன்றுகூடலைக் குறிக்கிறது.

இது மலேசியா உட்பட பல நாடுகளின்  சுதந்திர தினத்தையும் குறிக்கிறது என்றார் அவர்.

முன்னதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா ஆகியோர் இந்த இரவு விருந்தில் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset