நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா சுதந்திர தின கொண்டாட்ட மேடையில் ஏறிய பெண்ணின் இனம் தொடர்பான தவறான செய்திகளை போலிஸ் விசாரிக்கும்: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

பேரா சுதந்திர தின கொண்டாட்ட மேடையில் ஏறிய பெண்ணின் இனம் தொடர்பான தவறான செய்திகளை போலிஸ் விசாரிக்கும்.

புக்கிட் அமான் குற்ற புலனாய்வு பிரிவின் இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

பேராக் சுல்தான் இருந்த பிரதான மேடையில் ஏறியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தவறான செய்தியை போலிசார் மறுத்துள்ளனர்.

தவறான செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505(பி) இன் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இது பொதுமக்களுக்கு பயம் அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு அறிக்கையாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் மற்றும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் உண்மைக்கு மாறான அறிக்கைகளை வேண்டுமென்றே வெளியிடும் அல்லது பரப்பும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான, சமரசமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset