நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆறு தமிழ்ப்பள்ளிகளில் கூடுதல் கட்டடம் கட்டவும் சீரமைக்கவும் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

ஆறு தமிழ்ப்பள்ளிகளில் கூடுதல் கட்டடம் கட்டவும் சீரமைக்கவும் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

மடானி அரசாங்கத்தின் தமிப்பள்ளி, ஆலய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

நாடு முழுவதும் ஆறு தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல், மாற்று கட்டடம் கட்டுவதற்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது அப்பள்ளிகளில் வசதியான, உகந்த கற்றல் சூழலை உறுதி செய்யும்.

பேராக்கில் உள்ள கிளேபாங் தமிழ்ப்பள்ளி, இந்து வாலிப சங்க தமிழ்ப்பள்ளி, சிலாங்கூரில் வட ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூரில் கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி, பினாங்கில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி  ஆகியவை சம்பந்தப்பட்ட ஆறு பள்ளிகளாகும்.

கூடுதல் கட்டட கட்டுமானம், மாற்று கட்டடம், பராமரிப்பு திட்டத்தை செயல்படுத்துவது குறித்த சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியபோது இது முடிவு செய்யப்பட்டதாக தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு  துணையமைச்சருமான அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  இந்திய சமூகத்திற்கான ஆலயம், தமிழ்ப் பள்ளிகள் சம்பந்தப்பட்ட திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் எனக்கு பொறுப்பை வழங்கினார்.

இதன் அடிப்படையில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset