நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸின் உடல் பாதுகாப்பாக மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது

செமினி:

ஸ்கூடாய் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலபேஸ்) பயிற்சியாளர் சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடினின் உடல்கள் செமினியில் உள்ள கம்போங் ரிஞ்சிங் இஸ்லாமிய மையத்து கொல்லையில் பாதுகாப்பாக மீண்டும் அடக்கம் செய்யப்பட்டன.

மரணமடைந்தவரின் உடல் மாலை 6.09 மணிக்கு போலிஸ் பாதுகாப்புடன் கல்லறைக்கு வந்தது.

சம்சுல் ஹரிஸ் குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் அடக்கம் செய்யும் செயல்முறை முடியும் வரை ஊடக பணியாளர்களுடன் கல்லறைக்கு வெளியே காத்திருந்தனர்.

சம்சுல் ஹரிஸின் தாயார் 45 வயதான உம்மு ஹைமான் பீ தௌலத்கன், 

தனது மகனின் கல்லறையிலிருந்து மாலை சுமார் 6.48 மணியளவில் ஒரு வழக்கறிஞர், பல குடும்ப உறுப்பினர்களுடன் நடந்து செல்வதைக் காண முடிந்தது.

மேலும் கல்லறையின் சுற்றளவை பாதுகாக்க அதிகாரிகள், போலிசார் குழு தயாராக இருப்பதை காண முடிந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset