நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகடிவதை என்பது நமது கலாச்சாரம் அல்ல: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

பகடிவதை என்பது நமது கலாச்சாரம் அல்ல. இதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மஇகா இளைஞர் பணிப்படையின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் ஊரவலம் இன்று நடைபெற்றது.

மேலும் பணிப் படையின் பகடிவதை ஆலோசனை புகார் அழைப்பு சேவையும் அறிமுகம் செய்யப்பட்டது.

இம்முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள அண்ட்ரூ டேவிட்டிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

உண்மையான சுதந்திரம் என்பது காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல.

குற்றச் செயல்களின் பிடியிலிருந்தும், நமது சமூகத்தை அழிக்கும் படிவதை கலாச்சாரத்திலிருந்தும் விடுதலை பெறுவதும் ஆகும். 

பகடிவரை என்பது நமது கலாச்சாரம் அல்ல. இது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை.

மேலும் இந்த முயற்சி சுதந்திர உணர்வைத் தூண்டுவது மட்டுமல்லாமல்.

எதிர்கால சந்ததியினரை கொடுமைப்படுத்துதல் கலாச்சாரத்திலிருந்தும், நமது சமூகத்தை அழிக்கும் குற்றங்களிலிருந்தும் விடுவிக்கிறது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset