நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழல், கடத்தல், கும்பல்களிடம் இருந்து விடுபடுவதே உண்மையான சுதந்திரம்: பிரதமர்

செர்டாங்:

ஊழல், கடத்தல், கும்பல்களிடம் இருந்து விடுபடுவதே நாட்டிற்கான உண்மையான சுதந்திரம்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மலேசியாவை நீண்ட காலமாக பலவீனப்படுத்தியுள்ள ஊழல், கடத்தல் கும்பல்களிடமிருந்து நாடு தன்னை விடுவித்துக் கொள்ளும்போதுதான் அதன் உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்.

பல ஆண்டுகளாக அது நாட்டின் போராட்டமாக இருந்து வருகிறது

ஆனால் அரசியல் விருப்பத்தின் மூலம் நாம் அதை வெல்ல முடியும்.

மலேசியாவின் பலம் அதன் மக்களின் பலத்திலும் உள்ளது.

அவர்கள் தொடர்ந்து ஊழல் நடைமுறைகளை நிராகரிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ  அன்வார் மேலும் கூறினார்.

இந்தத் தவறான செயலை நாம் முற்றிலுமாக நிறுத்த முடிந்திருக்கிறோமா? இல்லை. அது இன்னும் இருக்கிறது.

அதனால்தான் சுதந்திரத்தின் உணர்வு என்பது இந்த நாட்டை ஊழல், கடத்தல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்தும் பாதுகாத்து விடுவிப்பதாகும். 

நமது மக்களை விடுவிப்பதற்கும் இந்த அழிவுகரமான நடைமுறைகளை ஒழிப்பதற்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் தேசிய தின சிறப்புச் செய்தியில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset