நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாராவின் மரண விசாரணைக்கு உதவ நோயியல் நிபுணர் உட்பட 70 பேர் அழைக்கப்படுவர்

கோலாலம்பூர்:

ஷாராவின் மரண விசாரணைக்கு உதவ நோயியல் நிபுணர் உட்பட 70 பேர் விளக்கமளிக்க அழைக்கப்படுவர்.

சட்டத்துறை தலைவர் அலுவலகம் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தது.

படிவம் ஒன்று மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரை  உடலை பிரேத பரிசோதனை செய்த நோயியல் நிபுணர் உட்பட மொத்தம் 70 சாட்சிகள் இப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் சாட்சியமளிக்க அழைக்கப்படுவர்.

இதில் சாட்சியமளிக்க அழைக்கப்படும் முக்கிய சாட்சிகளில் நோயியல் நிபுணர் ஒருவராவர்.

குறிப்பாக பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணத்தை விளக்க அவர் அழைக்கப்படுவார்.

விசாரணை நடவடிக்கைகளின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களைத் தயாரித்தல், நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட முழுமையான தயாரிப்புகளையும் செயல்பாட்டு அதிகாரிகள் குழு செய்துள்ளது.

கொரோனர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டபடி, விசாரணை நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள தரப்பினரும், கண்காணிக்கும் வழக்கறிஞர்களும் கலந்துகொள்வார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset