நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹாரிஸின் இரண்டாவது பிரேத பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருப்பதாகக் காட்டுகிறது: குடும்ப வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

சம்சுல் ஹாரிஸின் இரண்டாவது பிரேத பரிசோதனையில்  
சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருப்பதாகக் காட்டுகிறது.

சம்சுல் ஹரிஸின் குடும்ப வழக்கறிஞர் டத்தோ நரேன் சிங் இதனை கூறினார்.

ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை பயிற்சியாளர் சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடினின் உடலில்  இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனையில் அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் உள்ளது. இதனால் மேலும் விசாரணை தேவை என்று அவர் கூறினார்.

இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணியளவில் முடிந்தது.

இது முழுமையாக மேற்கொள்ளப்பட்டது, உடலின் ஒவ்வொரு பகுதியும் பரிசோதிக்கப்பட்டு பார்க்கப்பட்டது. மேலும் சிடி ஸ்கேன் செய்யப்பட்டது.

இறந்தவரின் உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருந்ததற்கான முடிவுகள் எங்களுக்குக் கிடைத்துள்ளதால், சட்டத்துறை தலைவர் (டான் ஸ்ரீ முகமட் துசுகி மொக்தார்), போலிஸ் தலைவர் (டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில்) ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உடனடி மரண விசாரணை செயல்முறையை நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வழக்கில் இன்னும் தீவிரமான விசாரணையை நடத்துமாறு காவல் துறைத் தலைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset