நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறைந்த சம்சுல் ஹாரிஸின் உடல் இன்று மாலை மீண்டும் அடக்கம் செய்யப்படும்

கோலாலம்பூர்:

மறைந்த சம்சுல் ஹாரிஸின் உடல் இன்று மாலை மீண்டும் அடக்கம் செய்யப்படும்.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் தடயவியல் மையத்தில் சந்தித்த வழக்கறிஞர் டத்தோ நரேன் சிங் இதனை கூறினார்.

பலாப்ஸ் ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலாப்ஸ்) பயிற்சியாளரான மறைந்த சம்சுல் ஹாரிஸ் ஷம்சுதீனின் உடல், பிரேத பரிசோதனை முடிந்தவுடன் மீண்டும் அதே அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்யப்படும்.

கோலாலம்பூர் மருத்துவமனையில் உள்ள தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத்தில் தடயவியல் குழுவால் உடல் பிரேத பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

பிரேத பரிசோதனை செயல்முறைக்கு நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து பிரேத பரிசோதனை முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மருத்துவமனையில் சம்சுல் ஹரிஸின் தாயார் உம்மு ஹைமான் பீ தௌலத் குன், அவரது குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset