நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

68ஆவது சுதந்திர தினத்தை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர்:

நாட்டின் 68ஆவது மக்களும் தினத்தை கொண்டாடும்  அனைவருக்கும் வாழ்த்தை மஇகா சார்பில் தெரிவித்துக் கொள்வதாக தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சும்மா வந்ததல்ல சுதந்திரம் என்பதை இன்றைய இளம் தலைமுறை எண்ணிப் பார்த்திட வேண்டும். 

நாட்டு விடுதலைக்காக குறிப்பாக மெர்டேக்கா காலத்தில் அன்றைய மலாயாவில் இனம், மொழி கடந்து எல்லோரும் நாட்டு விடுதலை என்ற ஒற்றை சிந்தனையில் ஒன்றுபட்டு அரும்பாடுபட்டு எண்ணற்ற தியாகங்களை புரிந்ததன் விளைவாகத்தான் நமக்கு விடுதலை கிடைத்தது. 

அந்த விடுதலை விடிவெள்ளி முளைத்த நாள் 68 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் என்பதை எண்ணும் பொழுது உள்ளத்தில் எழும் புத்துணர்ச்சிக்கும் குதூகலத்திற்கும் அளவில்லை. 

இதன் தொடர்பில்  நம் முன்னோர் எண்ணற்றோர் பல வகையிலும் தியாகம் புரிந்து மக்களை ஒருங்கிணைத்து விடுதலையை நோக்கி முன்னேற்றி வழி நடத்தினர். 

அத்தகைய பெருமக்களை  நாம் அனைவரும் இன்று எண்ணிப் பார்க்க வேண்டும். 

நாடு இன்று பல்துறையிலும் வளர்ச்சி கண்டிருக்கிறது குறிப்பாக கல்வி அறிவியல் முன்னேற்றத்தில் சாதனையை புரிந்து வருகிறது நம் மலேசியத் திருநாடு. 

பிரெஞ்சு நாட்டு உதவியுடன் விண்கலம் ஏவும் அளவிற்கு நாம் அறிவியல் புத்தாக்கப் பாதையில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளோம். 

மலேசியாவில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் இந்த சுதந்திர தினத்தை ஒற்றுமையாக கொண்டாட வேண்டும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset