நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா இந்திய சமூகத்தை பாதிக்காது: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா இந்திய சமூக மக்களை பெரிய அளவில் பாதிக்காது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

அரசாங்கம் தற்போது அமலுக்கு கொண்டு   வரவிருக்கு நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா இந்திய சமூகத்தை பாதிக்காது, 

மாறாக நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் பயனளிக்கும்.

இந்தச் சட்டம் இன்னும் அமைச்சகத்திடமிருந்து விரிவான விளக்கத்திற்காகக் காத்திருக்கிறது.

எனவே முன்கூட்டியே முடிவுகளை எடுப்பது பொருத்தமற்றது.

மேலும் இதில் சர்ச்சைக்குரிய அம்சங்கள் உள்ளன. அமைச்சருக்கு அது குறித்து விளக்கமளிக்க் இடம், நேரம் கொடுங்கள். 

விரிவான விளக்கம் கிடைத்த பிறகு, நாம் ஒரு முடிவை எடுக்க முடியும்.

முழு விஷயத்தையும் கேட்க வேண்டும். ஒரே ஒரு அத்தியாயத்தைக் கேட்ட பிறகு முடிவெடுப்பது தவறு.

இன்று பண்டார் ஸ்ரீ டாமன்சாராவில் உள்ள மெனாரா அமானா இக்தியாரில் சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதியின் மெர்டேகா மடானி ஊர்வல நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர்  செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

பல்வேறு முயற்சிகள் மூலம் இந்திய சமூகத்தின் வளர்ச்சியில் அரசாங்கம் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது.

சமீபத்தில் பிரதமர் விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீடுகளை அறிவித்தார். 

மேலும் தமிழ்ப்பள்ளிகளின் ஐசிடி ஆய்வகங்களுக்கு நிதி வழங்கப்படுகின்றன.

அதேபோல் அரசு தனியார் உயர் கல்விக் கூட பட்டதாரிகளுக்கு உதவிகளும் வழங்கப்படுகின்றன.

மேலும் ரஹ்மா பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசாங்கம் இந்திய சமூகத்தின் தேவைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கின்றன என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset