
செய்திகள் வணிகம்
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
கோலாலம்பூர்:
3 வாரங்களுக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
மலேசிய நேரப்படி, மாலை 4.45 மணியளவில் ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 87 ரூபாய் 87 காசு.
ஒருமலேசிய ரிங்கிட் 20 ரூபாய் 75 காசைத் தருகிறது.
இந்தியப் பங்குச் சந்தையிலும் நேற்று சரிவு காணப்பட்டது.
இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் 50 விழுக்காட்டு வரி இன்று நடப்புக்கு வந்தது.
ரூபாயின் மதிப்பு சரிவதற்கு அமெரிக்க வரி காரணம் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே 190 பில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. இந்திய ரூபாயின் வீழ்ச்சியினால் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடுதலாக தங்கள் ஊருக்கு பணம் அனுப்ப முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 22, 2025, 9:01 am
குவைத் மண்ணில் விளைந்த வாழைப்பழங்கள்: முதல் முறையாக வணிக முறையில் விற்பனைக்கு வருகின்றன
August 8, 2025, 12:29 pm
மலேசியாவில் புகழ் பெற்ற டோம்யாம் உணவகம் ராமநாதபுரத்தில் திறப்பு
August 7, 2025, 9:29 pm
சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவும்
August 5, 2025, 10:39 am
மலேசிய ரிங்கிட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்தது
August 4, 2025, 6:30 pm
பிரிக்பீல்ட்ஸில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டீ கடை கஃபே சமூக கடப்பாடுடன் செயல்படுகிறது
August 1, 2025, 6:09 pm