செய்திகள் வணிகம்
குவைத் மண்ணில் விளைந்த வாழைப்பழங்கள்: முதல் முறையாக வணிக முறையில் விற்பனைக்கு வருகின்றன
குவைத்:
குவைத்தில் முதன் முறையாக உள்ளூர்வாழைப்பழங்கள் சந்தைக்கு வருகின்றன. குவைத் குடிமகனான விவசாயி ஈத் சாரி அல்-அஸ்மியின் பண்ணை தோட்டத்தில் வாழை நடவு செய்யப்பட்டு வாழைப்பழங்கள் வர்த்தக நோக்கத்திற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. பல வருடங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட்ட பல சோதனைகள் மற்றும் முயற்சிகளுக்குப் பிறகு அவர் இந்த முன்னோடியில்லாத விவசாயத்தை செய்து சாதனை படைத்துள்ளார்.
நாட்டின் சந்தையில் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக கிடைக்கும் வகையில் சந்தைப்படுத்தலை அவர் ஒழுங்கமைத்துள்ளார். காய்கறி சந்தைக்குச் செல்லாமல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரும் நேரடியாக வந்து வாங்கி செல்லும் வகையில் விற்பனை மையங்களை நிறுவ இடங்களைக் கண்டறிய அவர் தற்போது பணியாற்றி வருகிறார். தற்போது, ஒரு நாளைக்கு 300 பெட்டி பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அடுத்த அக்டோபர் முதல் உற்பத்தியை 500 பெட்டிகளாக அதிகரிக்கும் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் வெளிப்படுத்தினார்.
நாட்டில் வசிக்கின்ற குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்வதையும், நியாயமான விலையில் புதிய உள்ளூர் பொருட்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கை இதுவாகும். விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்கள் வீட்டிலேயே வாழைப்பழங்களை வளர்க்க உதவும் வகையில் வாழை நாற்றுகளை விநியோகிக்கும் திட்டத்தையும் அவர் திட்டமிட்டுள்ளார்.
வாழைப்பழங்கள் வளரும் பருவம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மே வரை நீடிக்கும். நடவு செய்த மூன்று மாதங்களுக்குப் பிறகு பழங்கள் அறுவடை செய்யத் தொடங்கும் என்றும் அவர் விளக்கினார்.
இதை தவிர மற்ற பலவிதமான பழவகைகளையும் சோதனை முறையில் வளர்த்து அதிலும் வெற்றி கண்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 11:57 am
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடிவுக்கு வந்த எம்.பி.ஓ திரைப்பட நிறுவனம்
March 10, 2026, 3:46 pm
போர்ப்பதற்றத்தின் தாக்கம்: செம்பனை எண்ணெயின் விலை 10% உயர்வு
March 10, 2026, 10:15 am
ஈரான், அமெரிக்க பதற்றத்தின் மத்தியில் ரிங்கிட் வலுவான தொடக்கம்
March 9, 2026, 2:00 pm
வரலாறு காணாத உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
March 6, 2026, 11:24 am
மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த முதலீடு: கடந்த ஆண்டு 426.7 பில்லியன் பதிவு
March 5, 2026, 4:14 pm
மார்ச் 5 முதல்–11 வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு
March 5, 2026, 4:13 pm
OPR வட்டி விகிதம் 2.75 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டது – BNM
March 4, 2026, 12:18 pm
அமெரிக்க டாலருக்கு ஆதரவு அதிகரிப்பு: ரிங்கிட் மீது அழுத்தம்
March 4, 2026, 11:06 am
