நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஆடவர் நீர் வீழ்ச்சியின் உச்சியில் இறந்து கிடந்தார்

பாலிங்:

காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஆடவர் நீர் வீழ்ச்சியின் உச்சியில் இறந்து கிடந்தார்.

பாலிங் தீயணைப்பு,  மீட்பு நிலையத் தலைவர் சூல்கைரி மாட் தன்ஜில் இதனை கூறினார்.

கம்போங் தெலுக் சனாவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி காட்டில் இன்று அதிகாலை ஒருவர் இறந்து கிடந்தார்.

அருவி காட்டில் நீரில் மூழ்கிய ஒருவரைத் தேடி மீட்க உதவுமாறு போலிசாரிடம் இருந்து எங்களுக்கு அதிகாலை 2.34 மணிக்கு அழைப்பு வந்தது.

சிறிது நேரத்திலேயே பாலிங் தீயணைப்பு,  மீட்புத் துறையைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்கு வந்தது.

மேலும் 9 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருந்து உடலைத் தூக்க உதவியது.

தீயணைப்புப் படையினர் உச்சிக்குச் செல்ல மூன்று கிலோமீட்டர் பாதையில் ஏறித் தேடினர்.

அப்போது பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர்.

உடனே அதிகாரிகள் அவரை மீட்டனர். பின் அவர் இறந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset