நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தோட்டத் தொழிலாளர் வீட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் 50 மில்லியன் ரிங்கிட் என்னவானது?: டத்தோ சிவக்குமார் கேள்வி

கோலாலம்பூர்:

தோட்டத் தொழிலாளர் வீடுகளுக்கு நிதியளிப்பதற்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் 50 மில்லியன் ரிங்கிட் என்னவானது?.

டிஎஸ்கே எனப்படும் மலேசிய சினார் காசே சமூக நல அமைப்பின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இக்கேள்வியை எழுப்பினார்.

தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை சொந்தமாக்கிக் கொள்ள அரசாங்கத்தால் இந்த சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாக முன்னாள் மனிதவள அமைச்சரும் தற்போதையை சட்டத்துறை துணையமைச்சருமான குலசேகரன் கூறியுள்ளார்.

குறிப்பாக 10ஆவது மலேசியா திட்டத்தில் இருந்து மனிதவள அமைச்சின் கீழ் இந்நிதி ஒதுக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை அந்த நிதி எதற்கு எங்கு  பயன்படுத்தப்பட்டது என்பது தோட்ட மக்கள் உட்பட யாருக்குமே   தெரியவில்லை.

தோட்ட மக்களின்  இந்தக் கோரிக்கையை நாடாளுமன்ற வளாகத்திற்கு பலமுறை எழுப்பியுள்ளனர்.

ஆனால் இன்னும் எந்த பலனும் இல்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இத்திட்டம்  தோட்டத் தொழிலாளர்களுக்கு வசதியான வீடுகளை வாங்குவதற்கு நெகிழ்வான கடன்களை வழங்க வேண்டும்.

ஆனால் இதுவரை அதை செயல்படுத்துவது தொடர்பான விவாதங்கள் அமைச்சர்கள் மட்டத்தில் எழுப்பப்பட்ட போதிலும் தாமதமாகி வருகின்றன.

தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுவசதி பிரச்சினை ஒரு புதிய விஷயம் அல்ல.

ஆக அமைச்சர்கள் பேச்சு வெறும் அரசியல் அறிக்கையாகவோ அல்லது வாக்குறுதியாகவோ இருக்கக்கூடாது என்றும் டத்தோ சிவக்குமார் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset