நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சேர வேண்டிய இடத்தை விட்டு வேறு விமான நிலையத்தில்  தரையிறங்கிய AirAsia விமானம் 

இன்ச்சியோன்: 

மலேசியாவிலிருந்து தென்கொரியாவின் இன்ச்சியோன் நகருக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஏர் ஆசியா விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

விமானம் இன்ச்சியோன் நகரை அடைந்துவிட்டதாக எண்ணி, பயணிகள் உடைமைகளை எடுக்கத் தயாராயினர்....

ஆனால் AirAsia விமானம் தரையிறங்கியதோ வேறு நகரில்...

அது 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிம்போ (Gimpo) நகரில் தரையிறங்கியது.

இன்ச்சியோன் விமான நிலையத்தில் அதிக எண்ணிக்கையில் விமானங்கள் வந்ததாலும் வானிலை மோசமானதாலும்  AirAsia விமானம் கிம்போ விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால் பயணிகளுக்கு அது குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. விவரம் ஏதும் அளிக்கப்படவில்லை.
 
வேறு விமான நிலையத்தில் தரையிறங்கியதை அறிந்து, விமானச் சிப்பந்திகளே ஆச்சரியமடைந்ததாகப் பயணிகள் சிலர் கூறினர்.

விமானத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு கிம்போ விமான நிலையத்தில் தரையிறங்கியதாகச் சிப்பந்தி சொல்வது காணொளி ஒன்றில் பதிவானது.

 AirAsia பின்னர் காரணத்தை விளக்கியது. பயணிகளைக் குழப்பியதற்கு அது மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

2 மணிநேரத் தாமதத்துக்குப் பின் விமானம் மீண்டும் இன்ச்சியோன் விமான நிலையத்துக்குப் புறப்பட்டது.

ஆதாரம்: Malay Mail

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset