நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய கொடி தொங்க விடும் விவகாரம்; உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்: பினாங்கு  பயனீட்டாளர் சங்கத் தலைவர் மொஹைதீன் அப்துல் காதர் 

பினாங்கு:

சமீபத்தில் மலேசியக் கொடி தற்செயலாக தலைகீழாகக் காட்டப்பட்ட சம்பவத்தால் தேவையற்ற கோபத்தில் ஈடுபட வேண்டாம் என்று பினாங்கு பயனீட்டாளர்  சங்கத் தலைவர் மொஹைதீன் அப்துல் காதர்  மலேசியர்களை வலியுறுத்தியுள்ளார் 

பொறுப்பான நபர் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளார்.

 அது போதுமானதாக இருக்க வேண்டும் என்பதோடு அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோபக்குவம் நமக்கு தேவை என்றார் அச்சங்கத்தின் தலைவர் முஹைதீன் அப்துல் காதர்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று அது  அரசியலாக்கப்படுவது ஆரோக்கியமான செயல் அல்ல.

ஒரு நேர்மையான தவறை துன்புறுத்தப்படுவது அல்லது கொடுமைப்படுத்துதலுக்கான வாய்ப்பாக மாற்றுவது மிகவும் கவலை தருவதாக முஹைதீன் கூறினார்.

தெளிவாகத் தெரிந்த ஒரு தவறின் மீது இன அல்லது வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுவது யாருக்கும் உதவாது என அவர் நினைவூட்டினார்.

ஒரு தேசமாக, தொழிலாளர் பற்றாக்குறை, அதிகரித்து வரும் பணவீக்கம், நமது உணவு விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை, வேலையின்மை போன்ற சிக்கலான சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

இவை சிறிய தவறுகளுக்கு தனிநபர்களை இழிவுபடுத்துவதை விட நமது ஆற்றல், கவனம், ஒற்றுமை அதிகம் தேவைப்படுகிறது.

 அத்தகைய பிழைகளை நாம் சரிசெய்து, மன்னிப்புகளை ஏற்றுக்கொண்டு, ஒன்றாக முன்னேற வேண்டும் என முஹைதீன் அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset