நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் நண்பரால் தள்ளிவிடப்பட்டு காயமடைந்த பாலர் பள்ளி மாணவியின் உடல் நிலை சீராக உள்ளது

ஜொகூர்பாரு:

7 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் நண்பரால் தள்ளிவிடப்பட்டு காயமடைந்த  பாலர் பள்ளி மாணவியின்  உடல் நிலை சீராக உள்ளது.

ஜொகூர் மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுக் குழுவின் தலைவர் கைரின் நிசா இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

பள்ளியில் ஒரு தோழி தள்ளியதால் கீழே விழுந்ததாக நம்பப்படும் 6 வயது மாணவியின்  தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

இதனால் அம்மாணவி சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை ஏழு மணி நேரம் நீடித்தது.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின் ஆறு வயது சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset