நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னரின் கூடுதல் உத்தரவை அமல்படுத்துங்கள்; உயர் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை: முஹம்மத் ஹசான்

சிரம்பான்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட கூடுதல் உத்தரவு விவகாரத்தை  உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.

அம்னோ துணைத் தலைவரும் வெளியுறவு அமைச்சருமான டத்தோஸ்ரீ முஹம்மத்  ஹசான் இதனை வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் கூட்டரசு  நீதிமன்றத்தின் தீர்ப்பு, பின்னிணைப்பு உண்மையில் உள்ளது.

மேலும் அக்கூடுதல் உத்தரவை இப்போது அதை செயல்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

வீட்டுக் காவலுக்கான கூடுதல் உள்ளது என்பது தெளிவாகிறது.

கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அதை செயல்படுத்த முடியுமா இல்லையா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் அதன் மறுஆய்வு விசாரிக்கப்படும்.

ஆனால் எனக்கு எந்தத் தேவையும் இல்லை. அது இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் நாம் ஏன் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று அதை செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset