நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளி பிரச்சினைகள், சீரமைப்பு பணிகளில் கல்வியமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தும்: கல்வி துணையமைச்சர்

செந்தோசா:

தமிழ்ப்பள்ளிகளின் நிலவும் பிரச்சினைகள், சீரமைப்பு பணிகளில் கல்வியமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தும்.

கல்வி துணையமைச்சர் வோங் கா வோ இதனை கூறினார்.

கல்வியமைச்சின் பராமரிப்பு நிதியை வழங்குவதற்காக இன்று காலை ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றேன்.

கரையால் அரிப்பால் அப்பள்ளியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நான் நேரில் பார்வையிட்டேன்.

அதே வேளையில் அப்பள்ளியின் சிற்றுண்டிசாலை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் அப்பள்ளிக்கு கல்வியமைச்சின் பராமரிப்பு நிதியில் கீழ் 120,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.

அதே வேளையில் சிற்றுண்டி சாலை சீரமைப்புக்காக  கல்வியமைச்சு கூடுதலாக 40,000 ரிங்கிட் நிதி ஒதுக்குகிறது.

மேலும் எனது சொந்த நிதி என மொத்தம் 200,000 ரிங்கிட் இப்பள்ளிக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இப்பள்ளியை தொடர்ந்து பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிக்கு வந்தேன். இங்கு நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

காரணம் இப்பள்ளியின் வகுப்பறை கூரைகள் இடிந்து விழுந்துள்ளனர்.

இதனால் மாணவர்கள் தற்காலிகமாக மண்டபத்தில் கல்வி பயின்று வருகின்றனர்.

ஆக இப்பள்ளி வகுப்பறைகளின் கூரைகள் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் கல்வியமைச்சின் பராமரிப்பு நிதியின் கீழ் 120,000 ரிங்கிட்டும் எனது சொந்த நிதியின் கீழ் 40,000 என மொத்தம் 160,000 ரிங்கிட் இப்பள்ளிக்கி வழங்கப்படும்.

கல்வியமைச்சின் இந்நிதிகள் இவ்விரு பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்கு பெரும் பயனாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

இப்படி தமிழ்ப்பள்ளிகளின் நிலவும் பிரச்சினைகள், சீரமைப்பு பணிகளில் கல்வியமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று வோங் கா வோ இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset