நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளியில் இடிந்து விழுந்த கூரைகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்: குணராஜ் 

செந்தோசா:

பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளியில் இடிந்து விழுந்த கூரைகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.

கல்வி துணையமைச்சர் வோங் கா வோ இன்று செந்தோசாவில் உள்ள இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு வருகைத் தந்தார்.

இந்த வருகையின் போது ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 200,000 ரிங்கிட்ட்டும் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிக்கு 160,000 ரிங்கிட்டும் நிதியாக வழங்கினார்.

இதில் குறிப்பாக பத்து அம்பாட் தோட்டத் தமிழ்பபள்ளி வகுப்பறைகளின் கூரைகள் இடிந்து விழுந்தது.

இதனால் மாணவர்கள் மணடபத்தை வகுப்பறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதே வேளையில் இப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் புதிய பள்ளி கட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளது.

புதிய பள்ளி கட்டுவதற்கு பல ஆண்டும் தேவைப்படும்.

ஆகையால் கிடைத்த நிதியை கொண்டு இடிந்து விழுந்த கூரைகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

பத்து அம்பாட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 120 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்ட பள்ளியாகும். ஆகையால் இப்பள்ளி தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

 குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset