நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவு அதிகாரியை திட்டி காயப்படுத்தியதற்காக சீனாவைச் சேர்ந்த பெண் கைது

சிப்பாங்:

குடிநுழைவு அதிகாரியை திட்டி காயப்படுத்தியதற்காக சீனாவைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முனையம் 1 இல் சம்பந்தப்பட்ட பெண் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

இரவு 7.40 மணியளவில் 31 வயதான சந்தேக நபர், ஒரு ஆண், இரண்டு குழந்தைகளுடன் முகப்பிடத்தில் குடிநுழைவு அனுமதி சோதனைகளை மேற்கொண்டு கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

அப்போது குடிநுழைவு முகப்பிடத்தின் அதிகாரியை திட்டியதுடன் காயப்படுத்தியதற்காக அந்த சீனப் பெண் கைது செய்யப்பட்டார்.

முகப்பிடத்தில் இருந்த அதிகாரிகள் அவர்களில் எவருக்கும் நுழைவு  குறித்த எந்த பதிவுகளும் இல்லை என்பதைக் கண்டறிந்து.

மேலும் மதிப்பாய்வுக்காக குழு மேற்பார்வையாளரிடம் இந்த விஷயத்தை பரிந்துரைத்தனர்.

இருப்பினும், சோதனை மேற்கொள்ளப்படும்போது மற்ற பயணிகளுக்கு வழிவிடுமாறு கேட்டபோது சீனப் பெண் திருப்தி அடையவில்லை.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு இலாகா ஓர் அறிக்கையில் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset