நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸ் மரணம்; இரண்டாவது பிரேத பரிசோதனை, துரித விசாரணை நடத்த தாயார் நீதிமன்றத்தை நாடியுள்ளார்

ஷாஆலம்:

சம்சுல் ஹரிஸ் மரணம் தொடர்பில் இரண்டாவது பிரேத பரிசோதனை, துரித விசாரணை நடத்த  தாயார் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஸ்கூடாய் யூடிஎம் ரிசர்வ் அதிகாரிகள் பயிற்சிப் படை (பலாப்ஸ்) கேடட் பயிற்சியாளர் சம்சுல் ஹரிஸ் மரணமடைந்தார்.

இந்நிலையில் தனது  மகனின் மரணம் தொடர்பான இரண்டாவது பிரேத பரிசோதனை, விசாரணை நடவடிக்கைகளுக்காக அவரது கல்லறையை மீண்டும் தோண்ட அனுமதி பெற நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.

உம்மு ஹைமான் பீ தௌலத்கன், நேற்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில், மெசர்ஸ் நரன் சிங் அண்ட் கோ என்ற சட்ட நிறுவனம் மூலம்,

ஐஜிபி  முகமட் காலித் இஸ்மாயில், சட்டத்துறை தலைவர் முகமட் துசுகி மொக்தார் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

மகனின் உடலில் காணப்பட்ட வெளிப்படையான காயங்கள், மரணம் தொடர்பாக அவருக்குக் கூறப்பட்ட முரண்பாடான காரணங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தனது மகனின் மரணத்திற்குப் பின்னால் குற்றவியல் கூறுகள் இருப்பதாக தாய் கூறுகிறார்.

கடந்த ஜூலை 28ஆம் பயிற்சியில் ஈடுபட்ட பயிற்சியாளர்கள், நபர்களால் தான் என் மகனின் மரணம் நிகழ்ந்தது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.

மேலும் அன்று என்ன நடந்தது என்பது குறித்து என் மகனுடன் இருந்த பயிற்சியாளர்கள் சாட்சியமளிக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன்.

என் மகனின் உடலில் காணப்பட்ட காயங்கள் சாதாரண காயங்கள் அல்ல.

மாறாக ஒரு கனமான பொருளால் ஏற்பட்டவை என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்  ன்று அவர் ஒரு ஆதார வாக்குமூலத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset