நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தியை பிரதமர் நாளை மதியம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

புத்ராஜெயா:

அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தியை பிரதமர் நாளை மதியம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய பொது நிர்வாக நிறுவனத்தின் தொடர்பு, மொழி ஆய்வுகள் பள்ளியின் தலைவர் டாக்டர் சஹாரா சபியி இதனை கோடிக்காட்டினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை 20ஆவது பொது சேவை துறை விழாவில் பேசவுள்ளார்.

அப்போது அவர் அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை வழங்குவார்.

குறிப்பாக பிரதமர் பிற்பகல் 3.30 மணிக்கு உமாநாட்டில் பேசும்போது செய்தியை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு அடைய விரும்பும் திட்டங்களுக்கு அரசு ஊழியர்கள் வகிக்கும் பங்கு ஆகியவற்றைப் பிரதமர் பகிர்ந்து கொள்வார்

பொதுவாக இந்த நிகழ்வில் பிரதமர் பொது சேவை சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்களை அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset