நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய, துபாய் இந்திய முஸ்லிம் வர்த்தகர்களுக்கு இடையிலான வர்த்தக உறவு  மேலும் விரிவடைய வேண்டும்: டத்தோ அப்துல் ஹமித்

கோலாலம்பூர்:

மலேசிய, துபாய் இந்திய முஸ்லிம் வர்த்தகர்களுக்கு இடையிலான வர்த்தக உறவு மேலும் விரிவடைய வேண்டும்.

மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை வலியுறுத்தினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு துறைகளில் சாதித்து கொண்டிருக்கும் 11 இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் மலேசியா வந்துள்ளனர்.

இந்த வர்த்தகர்களை கௌரவிக்கும் நோக்கில் இன்றைய விழா நடைபெற்றது.

அதே வேளையில் மலேசியாவில் உள்ள வர்த்தகர்கள் அவர்களை சந்தித்தனர்.

அவர்களின் வர்த்தக ஆலோசனைகள் அனுபவங்களை கேட்டனர்.

குறிப்பாக இவ்விழா மலேசிய வர்த்தகர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.

இந்த சந்திப்பு இன்றோடு முடிந்து விடக் கூடாது. இந்த உறவு தொடர வேண்டும்.

குறிப்பாக மலேசிய, துபாய் இந்திய முஸ்லிம் வர்த்தகர்களுக்கு இடையிலான உறவு விரிவடைய வேண்டும்.

இங்குள்ள வர்த்தகர்கள் துபாயில் வர்த்தகங்களை மேற்கொள்ள உரிய வழிகாட்டல்களை வழங்க வேண்டும். இதுவே மிம்கோய்னின் எதிர்பார்ப்பாகும் என்று டத்தோ பிவி அப்துல் ஹமித் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset